புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது - முதல்வர் ரங்கசாமி தகவல்

ரங்கசாமி

மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து முயற்சி செய்வோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

 • Share this:
  புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

  புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டதொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துணைநிலை ஆளுநரின்  உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர், முதல்வர் தாக்கல் செய்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று பேரவையில் பேசிய  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியின் வளர்ச்சிக்காக ஆட்சியமைத்துள்ளோம். மத்திய அரசு புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை செய்யும்.

  புதுச்சேரிக்கு மத்திய அரசு கூடுதலாக 500 கோடி ரூபாய் தர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளேன். மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது நம் அனைவருடைய நிலைப்பாடு. அது நம்முடைய உரிமை. மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து முயற்சி செய்வோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தப்படும்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: