மூத்த எழுத்தாளர் கி.ரா.-வுக்கு பிறந்த நாள் - கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து..

மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கனிமொழி, கமலஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மூத்த எழுத்தாளர் கி.ரா.-வுக்கு பிறந்த நாள் - கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து..
மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கனிமொழி, கமலஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 5:10 PM IST
  • Share this:
கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணனுக்கு இன்று பிறந்த நாள். 98 வயதை நிறைவு செய்வதால், அவரது இல்லத்தில் "கி.ரா நூற்றாண்டை நோக்கி" என பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க முன்னோடியான கி.ரா கரிசல் வட்டார வழக்குகளுக்கு அகராதி உருவாக்கியவர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற படைப்புகளை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்தவர்.

Also read: கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: பேரவையில் அமைச்சர் துரைக்கண்ணு உறுதி


98 வயதை நிறைவு செய்து 99 வயதில் அடியெடுத்து வைக்கும் கி.ரா.வின் கரங்களால் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு விருதும் ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

கி.ரா.வின் சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, எம்எல்ஏ லட்சுமிநாராயணன் ஆகியோர் சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் பேசிய பலரும் கி.ரா.விற்கு உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். கி.ரா.விற்கு தொலைபேசி மூலம் எம்பிக்கள் ரவிக்குமார், கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், நடிகர் சிவக்குமார் மற்றும் தமிழ் அறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading