ஊரடங்கால் தீவனங்கள் வரத்து இல்லை: கவலையில் கால்நடைகள் வளர்ப்போர்

தீவனங்களின் விலை உயர்வால் கிராமப்புறங்களில் மாடுகளை வளர்ப்பது மிகவும் சிரமத்திற்கு இருப்பதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கால் தீவனங்கள் வரத்து இல்லை: கவலையில் கால்நடைகள் வளர்ப்போர்
கால்நடைகள்
  • Share this:
புதுச்சேரியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது கால்நடைகள். ஆனால் இந்த கால்நடை வளர்ப்பு என்பது பெரும் கவலையாகி விட்டது விவசாயிகளுக்கு. கூனிச்சம்பட்டு கிராமத்தில் MBA பட்டம் பெற்று  நாட்டு மாடு, நாட்டுக்கோழி, நாட்டு ஆடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாய சகோதர்கள்  நடத்தி வருகின்றனர்.

இவற்றுக்கு இயற்கை முறையிலான தீவனங்களை விவசாயிகள் அளித்து வருகின்றனர். கொரோனாவால் கோதுமைத் தவிடு, புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதன்  காரணமாக விலை உயர்ந்து காணப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கோதுமை தவிடு 1,500 ரூபாய்க்கு விற்கிறது.

இதேபோல் புண்ணாக்கு, கலப்பு தேடும் ஆகியவையும் கிலோவுக்கு 150 ரூபாய்  ரூபாய் வரை  உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடைகளை  வளர்ப்பதற்கு சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் நாட்டு மாடுகளின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.


ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் வரத்து குறைந்து தீவனங்கள் வரத்து குறைந்து தரம் குறைவான தீவனங்கள் கிடைப்பதாகவும் அரசு உடனடியாக கவனம் செலுத்தி தரமான தீவனங்கள் குறைந்த விலையில் அதிக அளவில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தீவனங்களின் விலை உயர்வால் கிராமப்புறங்களில் மாடுகளை வளர்ப்பது மிகவும் சிரமத்திற்கு இருப்பதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் மாடு வளர்ப்பை காப்பாற்ற அரசு மானிய விலையில் தீவனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூனிச்சம்பட்டுகிராம விவசாயி கண்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

தீவனங்களின் விலை உயர்ந்தாலும் பால் விலையை உயர்த்த முடியவில்லை. இதனால் மாடு வளர்ப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
 

Also see:
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading