கோயில் திருவிழாவில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு

புதுச்சேரியில் நடந்த  கோயில் திருவிழாவில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்பதால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட  10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் திருவிழாவில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட  10 பேர் மீது வழக்கு பதிவு
  • News18
  • Last Updated: August 12, 2020, 10:41 AM IST
  • Share this:
புதுச்சேரி வில்லியனூரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அலகு குத்தி செடல் எடுக்கும் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக பெரிய அளவிலான விழாக்கள் நடத்த கூடாது என அரசு அறிவித்த நிலையில் சிறிய அளவில் கோவில் வளாகத்திற்குள் மட்டுமே ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் நேற்று இரவு அலகு குத்தும் நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வில்லியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

கோயில் முன்பு போடப்பட்டிருந்த  சமூக இடைவெளியுடன் கூடிய வட்டத்திற்குள் அவர்கள் காத்திருந்து அலகு குத்திச் சென்றனர். மேலும் அம்மன் அலங்காரம் செய்து ஊர்வலம் இன்றி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது வில்லியனூர் போலீசார் அங்கு வந்து பக்தர்களை சாமி கும்பிட்ட உடன் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினார்கள்.


அதிக அளவில் கூட்டம் கூட்ட வேண்டாம். சமூக இடைவெளியுடன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துமாறு அறிவுறுத்தினார்கள். அப்போது அங்கு வந்த கோயில் பொறுப்பாளரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Also read... கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ சங்கர் கையில் எடுத்த சூப்பர் விஷயம்

முதலமைச்சரின் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதி மாதா கோவில்  கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்ற போது போலீசார் தடை செய்யாதது ஏன்..? முதலமைச்சர் மேல் வழக்குப் போடாதது..? ஏன் என அவர்களின் ஆவேசமாக பேசினார்கள்.இதனால் போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படும் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறியதாக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் உட்பட 10 பேர் மீது வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading