நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மனதளவில் குழந்தைகள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் நாராயணசாமி

  • Share this:
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜே.இ.இ தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில் புதுச்சேரியில் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இதுவரை ரூ.200 கோடி செலவு செய்துள்ளோம். இதுவரை மத்திய அரசு ரூ.3 கோடி மட்டுமே அளித்துள்ளது.  புதுச்சேரியின் மக்கள்தொகைக்கு ஏற்ப மத்திய அரசு நிதியை தரவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு நிதியை குறைக்கிறது. மேலும், ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் நிர்வாகத்தில் தேவையற்ற முட்டுக்கட்டைகளை போடுகின்றன என கூறினார்.

மேலும் படிக்க: புதிய கல்விக் கொள்கை: பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு..

நீட் தேர்வை ரத்து செய்யவும் ஜேஇஇ தேர்வை ஒத்தி வைக்கவும் வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் வழக்குத் தொடர வேண்டும். மேலும், கொரோனா தடுப்புக்காக மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும்.ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலங்களில் இருந்து மத்திய அரசு வருமானத்தை பெறுகிறது. ஆனால், மாநிலங்களுக்கு உரிய தொகையை தருவதில்லை. எதிர்கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தினால் மத்திய அரசு நிச்சயம் இறங்கி வரும்" எனவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.அதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி எழுதியுள்ள கடிதத்தில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் ஜே.இ.இ தேர்வை தள்ளி வைக்க வேண்டும். முக்கியமாக நீட் தேர்வு சிபிஎஸ்இ அடிப்படையில் நடக்கிறது. பல மாநிலங்களில் மாநில அரசு கல்விமுறை உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் 7க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். மனதளவில் குழந்தைகள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். 12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முன்பு இருந்ததை போல் தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Gunavathy
First published: