ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் தான் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சையா? - விசாரணை நடத்த அறிவுரை

சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் தான் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சையா? - விசாரணை நடத்த அறிவுரை

ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மர் மருத்துவமனை

தினமும் 8,000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் ஜிப்மரில் சிகிச்சை பெறுகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இனி சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை பெற முடியும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து விசாரிக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிலையையே தொடருமாறும் ஜிப்மர் நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்ளுமாறு புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜிப்மர் நிறுவனம் புதுச்சேரியில் 1823ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது 2,300 படுக்கை வசதிகளுடன் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. தினமும் 8,000 வெளி நோயாளிகள், 2,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாத வருமானம் 2,499 ரூபாய் கீழ் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ஜிப்மரில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இந்தத் திட்டத்தை பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விரிவுப்படுத்த ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் 2,499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜிப்மருக்கு பல மாநிலத்தவர்கள் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது.

  எனவே அனைத்து மாநிலங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள் சிசிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன்பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சிவப்பு ரேஷன் கார்டுகளை காண்பித்தால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தகுதியாக கேட்க கூடாது. இத்திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.

  இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக, நாளிதழ்களில் இன்று (24-09-2021) வெளியாகி உள்ளது.

  Must Read : சிகப்பு நிற ரேஷன் கார்டு இருந்தால்தான் இலவச சிகிச்சையா?- ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்புக்கு எம்.பி ரவிக்குமார் கடும் கண்டனம்

  இது குறித்து விசாரிக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையைத் தொடர ஜிப்மர் நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுமாறும் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: JIPMER, Puducherry, Treatment