Home /News /national /

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களுக்கு ரூ.1 சிறப்பு பேருந்து, இனி இலவசமாக இயக்கப்படும் என்று உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும், மாணவர்களுக்கு ரூ.1 சிறப்பு பேருந்து இனி இலவசமாக இயக்கப்படும் என்று  கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார். அப்போது அவர், புதுச்சேரி காவல்துறையில் 1,044 பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சீருடைப்படி நிலுவைத் தொகையில் முதல் தவணையாக, இரண்டு வருடங்களுக்குரிய ரூ.5.5 கோடி வழங்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சீருடை படியானது ஊர்காவல் படையினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க ஆபரேஷன் விடியல் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் பொதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி இதுவுரை 99 குற்ற வழக்குகள் பதியப்பட்டு 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 53.231 கிலோ கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ரவுடிகளை ஒடுக்க ஆபரேஷன் திரிசூல் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 23 கொலை வழக்குகள், 16 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ALSO READ | வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் மாற்றமா? கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரியில் உள்ள 60 காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மதிப்பீடு ஆராயப்பட்டு ரூ.3.74 கோடிக்கு புனேயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணை அளிக்கப்பட்டுள்ளது. கேமரா பொறுத்த ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 37 சிக்னல்களை சரி செய்ய ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது மாணவர்கள் ரூ.1 கட்டணத்தில் பயணிக்கும் சிறப்பு பேருந்து சேவை இனி இலவசமாக இயக்கப்படும். புதுச்சேரியில் கல்வி, விளையாட்டு தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்த வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்துவதற்கு விஷன் பிளான் 2032 உருவாக்கப்படும். மேலும் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வித்யா சமிக்ஷா சேந்திரங்கள் உருவாக்கப்படும். ஏஎப்டி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.16 கோடியும், சுதேசி, பாரதி மில்  தொழிலாளர்களுக்கு 42 பேரை தவிர மற்றவர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூ.17.13 கோடியும் இந்த நிதியாண்டிலேயே முற்றிலும் பட்டுவாடா செய்யப்படும்.

ALSO READ | இருசக்கர வாகன விபத்துகளில் தமிழகம் முதலிடம்... 8,529 பேர் இறப்பு

புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஏற்படும் இன்னல்களைக் களைய ஒற்றைச் சாளர முறை சீராய்வு செய்யப்பட்டு தொழில் உரிமங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ்கள் குறித்த காலத்தில் வழங்கவில்லை எனில் அதனை டீமேட் கிளியரன்ஸ் அதாவது தானாக வழங்கப்பட்டதாக கருத்தப்படும் என்ற நிலை நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

மேலும், அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட புதுச்சேரியில் மின்சாரம் மின்துறையால் தடையின்றி சீராக வழங்கப்படுகிறது. கடந்தாண்டு மத்திய அரசால் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட புதுச்சேரி மின்துறை முதல் இடத்தில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஏதுமில்லை என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Education, Puducherry

அடுத்த செய்தி