அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கருணாநிதி பெயரில் காலை உணவு திட்டம்.. புதுச்சேரியில் இன்று தொடக்கம்..

விழா தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.,

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது.

  • Share this:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும். இதன்படி சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்ட காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்'' என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க...புதுமணப்பெண் தற்கொலை.. சிக்கிய கணவன், அண்ணி..

அதன்படி, முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக எம்.பி R.S.பாரதி பங்கேற்கிறார். அவர்களுடன் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும்  பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க...Soorarai Pottru Review: சூர்யாவின் சூரரை போற்று ரிலீஸ்: படம் எப்படி இருக்கு?இத்திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 8000 மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published: