கூட்டணியில் குழப்பமில்லை... அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

சட்டமன்ற தேர்தலில் 30 க்கு 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

  • Share this:
    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் 30 க்கு 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனவும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தமிழகத்தைப் போலவே, ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் களம் போல அங்கு பரபரப்பாக இல்லை என்றும், வேகம் குறைவாகவே இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

    சமீபத்தில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்தனர். சிலர் பாஜகவில் இணைந்தனர். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார் காங்கிரசில் இருந்து விலகிய லட்சுமி நாராயணன்.

    புதுச்சேரியில், பாஜகவுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது, தனித்து போட்டியிடுவதா என்ற குழுப்பத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

    Must Read: புதுச்சேரி: காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் லட்சுமி நாராயணன்

     

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன், “தங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.  30க்கு 30 என அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். நாளை மறுநாளுக்குள் எல்லாம் முடிவாகும்” என்றும் கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: