• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் பதவி ஏற்றார்!

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் பதவி ஏற்றார்!

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 14ம் தேதி செல்வம் தனது வேட்புமனுவை சட்டசபை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார். நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனுதாக்கல் காலக்கெடு முடிந்தது. எதிர்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழ்தாய் வாழ்த்துடன் சபை கூடியது. தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதல் நிகழ்வாக, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், முன்மொழிந்தவர், வழிமொழிந்தவர் என தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் விபரத்தை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், ஒரு உறுப்பினரே மனு செய்துள்ளதால் போட்டியின்றி செல்வம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் சபாநாயகர் இருக்கைக்கு வரும்படி செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். அவை முன்னவர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினர்.

அப்போது, திமுக எம்.எல்.ஏ. நாஜிம் பேசும்போது, சபாநாயகர் செல்வம் திமுகவின் தொகுதி செயலாளராக இருந்ததை தற்காலிக சபாநாயகர் சொல்ல மறுத்து விட்டார் என கூறினார். அப்போது, அங்கே இருந்தால் அப்படியே தான் இருந்து இருப்பேன். 36 ஆண்டுகளாய் திமுகவில் தொகுதி செயலாளராக மட்டுமே இருந்தேன். ஆனால் பாஜகவிற்கு வந்த பிறகு இந்த பெரிய பதவி கொடுத்து இந்த இயக்கம் பாஜக என சபாநாயகர் செல்வம் கூறினார். மேலும், திமுகவில் இருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். திமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்ததால் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றும் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

Must Read :  நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு

இறுதியில் சபாநாயகர் செல்வம் ஏற்புரையாற்றினார். இதையடுத்து சபையின் இன்றைய அலுவல்கள் அனைத்தும் நிறைவுபெறுவதாகக் கூறி சபாநாயகர் செல்வம், சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார். காலை 9.33மணிக்கு துவங்கிய அவை நடவடிக்கை 10.13 மணிக்கு முடிந்தது.

புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்தவர் ஒருவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார். இவர் புதுச்சேரியின் 21ஆவது சபாநாயகர் என்பது குறிப்பிட தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: