500-க்கும் பூஜ்ஜியம்... புதுச்சேரி அரசுக்கு மதிப்பெண் போட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்..

புதுச்சேரி அரசுக்கு 500-க்கும் பூஜ்ஜியம் என  பாஜக எம்எல்ஏக்கள் மதிப்பெண் போட்டு பேனர்களை சட்டமன்றத்திற்கு எடுத்து வந்தனர்.

500-க்கும் பூஜ்ஜியம்... புதுச்சேரி அரசுக்கு மதிப்பெண் போட்ட பாஜக எம்.எல்.ஏக்கள்..
பாஜக எம்எல்ஏக்கள்
  • Share this:
புதுச்சேரி அரசுக்கு 500-க்கும் பூஜ்ஜியம் என  பாஜக எம்எல்ஏக்கள் மதிப்பெண் போட்டு பேனர்களை சட்டமன்றத்திற்கு எடுத்து வந்தனர்.

புதுச்சேரி சட்டமன்றம் 30 உறுப்பினர்களை கொண்டது.பொது தேர்தல் மூலம் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசின் அனுமதியுடன் நியமித்து கொள்ளலாம்.

வழக்கமாக ஆளுங்கட்சியை சார்ந்தவர்களே நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்படுவார்கள்.ஆனால் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு,பாஜகவை நிர்வாகிகள் 3 பேரை ஆளுங்கட்சியின் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு நியமித்தது.


தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடி வரும் பாஜகவின் நியமன எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் பேனர் ஏந்தி வந்தனர்.  பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி,சங்கர் ஆகியோர்  கையில் பதாகை  ஏந்தி இருந்தனர்.

Also read... நாயிடமிருந்து தங்கையை காக்க போராடி முகத்தில் 90 தையல்கள் - சிறுவனை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்

அந்தப் பதாகையில்  அரசின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்கும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதி, வேலைவாய்ப்பு, பொதுத்துறை, ஊழியர்கள் சம்பளம், இலவச அரிசி, சாலை வசதி போன்றவற்றில் புதிய அரசுக்கு நூற்றுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கி இருந்தனர்.அதேபோல் ஊழல்,சட்டம் ஒழுங்கு, சீர்கேடு, போதைப்பொருள் விற்பனை, வரி ஏய்ப்பு நிர்வாக திறமையின்மை போன்றவற்றுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்கி இருந்தனர்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading