சொந்த பணத்தில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கிய எம்.எல்.ஏ.

Youtube Video

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், தனது சொந்த முயற்சியில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளில் முன் உதராணமாக திகழ்கிறார்.

 • Share this:
  புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்ததால், ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மேலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

  இதை அறிந்த காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம், கொரோனா நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். அதன்படி புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில், தனது சொந்த பணத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி, "சமுதாய பிராணவாயு மையம்" என்ற பெயரில் 100 படுக்கைகள் வசதி கொண்ட மையத்தை உருவாக்கியுள்ளார்.

  எம்எல்ஏ-வின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை, புதுச்சேரி சுகாதார துறை செயலர், மருத்துவர் அருண் பார்வையிட்டார். பின்னர், பேசிய அவர், இந்த மையத்திற்கு தேவையான மருத்துவ ஊழியர்களை அரசு சார்பில் நியமித்து, விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.   

  மேலும் படிக்க... அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு இதய சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.

  பல்கலைக்கழக மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிகிக்சை மையத்திற்கு வருபவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். அத்துடன், மையத்தை சுத்தம் செய்யும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், கல்யாணசுந்தரம் போன்று அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், தங்களால் இயன்ற உதவியை செய்தால், கொரோனா ஒழிப்பில் அரசின் சுமை குறையும் என்பதே நிதர்சனம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: