புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஆளுநரை கொண்டு செயல்படுத்த
பாஜக சதித்திட்டம் தீட்டியிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி ஆட்சி நிர்வாகத்தில் பாஜக தலையீடு வெளிப்படையாக தெரிகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு ஆளுநர் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகின்றது.
ஆளுநர் மூலம் விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த பாஜக சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக புதுச்சேரியில் உள்ள ஜனாயக கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Also Read : மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ரூ. 25,000 வரை அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிப்பதாகவும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை அல்ல ஆளுநரே எந்த மாநிலத்திற்கும் வேண்டாம் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்றது என்றார்.
கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக போராட்டம், அது பயங்கரவாத நடவடிக்கை அல்ல, புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் புதுச்சேரிக்கு வருகை தரும் அமீத்ஷாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்த முடிவு செய்துள்ள கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.