Puducherry Assembly Election results 2021 : புதுச்சேரியில் கால்பதித்த பாஜக : நமச்சிவாயம், ஜான் குமார் வெற்றி

Puducherry Assembly Election results 2021 : புதுச்சேரியில் கால்பதித்த பாஜக : நமச்சிவாயம், ஜான் குமார் வெற்றி

நமச்சிவாயம்

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களான நமச்சிவாயம் மற்றும் ஜான் குமாரும் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

  • Share this:
    புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஜான் குமாரும் வெற்றி பெற்றுள்ளார்.

    இதனால், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பாஜக, புதுச்சேரியில் கால்பதித்துள்ளது. இந்த கூட்டணி பல்வேறு தொகுதிகளில் முன்லையில் இருந்து வருகின்றது.

    Must Read : புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தொடர் முன்னிலை!

     

    இந்நிலையில், புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிபால் கென்னடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன.

    புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மூன்று மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காரைக்காலில் 5, மாகி, ஏனாமில் தலா ஒன்று என 7 தொகுதிகளுக்கான வாக்கும் எண்ணப்படுகிறது.
    Published by:Suresh V
    First published: