கே.டி.ராகவன் தொடர்பான ஆடியோ விவகாரம்: அண்ணாமலை பதில்!

அண்ணாமலை

பாஜக தலைவர்களுக்கு எதிரான பாலியல் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டதுள்ளது. குழு நடவடிக்கை எடுக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் தொடர்புடைய வீடியோவை  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதி பெற்றே வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் கூறியிருந்த நிலையில் அது தொடர்பாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

  தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த பாலியல் வீடியோவை, அதே கட்சியைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.  இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து  கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன்பாஜகவில் இருந்து நீக்கப் பட்டார்.

  இதை தொடர்ந்து மற்றொரு வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு அந்த வீடியோ வெளியிடப்பட்டதாகவும், இதற்கு ஆதாரமாக சில ஆடியோக்களையும் வெளியிட்டார்.  மேலும், தமிழக பாஜக அலுவலகத்தில் உள்ள கட்சித் தலைவர் அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது என அண்ணாமலை கூறியதாகவும், அதனாலேயே தனது அறைக்குள் எந்தப் பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை என அண்ணாமலை பேசியதாகவும் மதன் தன் வீடியோவில் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக சில ஆடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதன்முறையாக இன்று புதுச்சேரி சென்றார். பாஜக தலைமையகம் சென்ற அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதன் ரவிச்சந்திரனின் ஆடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

  மேலும் படிக்க: பள்ளி திறப்பு உத்தரவுக்கு தடை விதித்த நீதிமன்றம்!


  அதற்கு பதிலளித்த அண்ணாமலை, இந்த விவகாரத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டதுள்ளது. குழு நடவடிக்கை எடுக்கும். அந்த பத்திரிகையாளர் எதற்கு என்னை சந்தித்தார், அப்போது நான் என்ன பேசினேன் என்று நான் அறிக்கையில் சொன்னதற்கும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது.  அவரிடம் வீடியோ ஆதாரத்தை கேட்டோம் ஆனால், தர ஆர்வமில்லாததால் அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் முறைப்படி அந்த வீடியோவை கொடுத்திருந்தால் கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்"  என்று தெரிவித்துள்ளார்.

  இதையும் படிக்க: ரகசியம்.. பரம ரகசியம்: சட்டப்பேரவையில் பாடிய பாடல் குறித்து ஓபிஎஸ் தகவல்!


   பள்ளி திறப்புக்கு வரவேற்பு- விநாயகர் சதுர்த்தி தடைக்கு எதிர்ப்பு

  தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார். அதேவேளையில், விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலை வைத்து வழிபடக்கூடாது என்றும் ஊர்வலமாக சென்று கடற்கரையில் சிலைகளை கரைக்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: