Home /News /national /

மகாகவி பாரதிக்கு 482 கிலோவில் சாக்லெட் சிலை!

மகாகவி பாரதிக்கு 482 கிலோவில் சாக்லெட் சிலை!

சாக்லெட்டில் உருவான பாரதி சிலை

சாக்லெட்டில் உருவான பாரதி சிலை

புதுச்சேரியை சேர்ந்த சாக்லெட் தயாரிப்பாளர் பாரதி சிலையை சாக்லேட்டில் தயாரித்துள்ளார்.

புதுச்சேரி நகரில் மிஷன் வீதியில் உள்ள  தனியார் சாக்லெட் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன், ஆண்டுதோறும் சாக்லெட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத்திறமையை வெளிப்படுத்துவார். இவ்வகையில் கடந்த காலங்களில் சாக்லெட்டை கொண்டு ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன்,  ஆகியோரின் உருவங்களை வடிவமைத்தார்.

Also Read: தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் - அரசாணை வெளியீடு

கொரோனாவால் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் இறந்த போது அவரது நினைவாக வைத்த சாக்லெட் சிலை பலரையும் உருக்கியது. தற்போது மகாகவி பாரதியாருக்கு சாக்லெட் சிலையை அவர் வடிவமைத்துள்ளார். சாக்லெட் சிலை வடிவமைத்த ராஜேந்திரன் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் 2021 புத்தாண்டையொட்டி மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் வகையிலும், அவரை அனைத்து இளையோரிடம் கொண்டு செல்லும் வகையிலும்இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Also Read:  3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

482 கிலோ சாக்லெட்டை கொண்டு 6.6 அடி உயரத்தில் சிலை வடிவமைத்துள்ளோம். பாரதி நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ள இச்சாக்லெட் சிலை வடிவமைக்க 106 மணி நேரமானது. பாரதியின் வரிகளான "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்றும் எழுதியுள்ளோம். சாக்லெட்டில் புதுமையை காட்டவேண்டும் எண்ணத்தினாலேயே இச்சிலைகளை சாக்லெட்டில் வடிவமைக்கிறேன்" என்றும்ராஜேந்திரன்தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Chocolate, Mahakavi Bharathiyar, Pudhucherry

அடுத்த செய்தி