பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் உடல் நல்லடக்கம் - புதுவை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகன் உடல்நிலைக் காரணமாக மரணித்தார். அவரின் உடல் வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் உடல் நல்லடக்கம் - புதுவை முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனுக்கு புதுவை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
  • Share this:
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி புதுச்சேரியில் நேற்று அவரது 92ம் வயதில் காலமானார்.

இன்று காலை 10 மணி வரை காந்திநகர் முதல்தெருவிலுள்ள இல்லத்தில் மன்னர் மன்னன் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து அங்கிருந்து எடுத்து வரப்பட்டு பாரதிதாசன் அரசு  அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. முதல்வர் நாராயணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Also see:



அதைத்தொடர்ந்து மாலை அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் இடுகாட்டில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவிடத்தில் அவரது சமாதி அருகே மன்னர் மன்னன் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்க நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், தமிழ் அறிஞர்கள்  மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர். போலீஸ் பேண்ட் வாத்தியமும் இசைக்கப்பட்டது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading