Home /News /national /

விசில் அடித்ததும் பறந்து வந்து பழம் உண்ணும் வவ்வால்கள்..

விசில் அடித்ததும் பறந்து வந்து பழம் உண்ணும் வவ்வால்கள்..

விசில் அடித்ததும் வவ்வால்கள் பறந்து வந்து பழம் உண்ணும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி அருகேயுள்ள கன்னியக்கோயில் கிராமத்தில் விசில் அடித்து அழைத்தவுடன் பறந்து வந்து பழத்தை சாப்பிடும் வவ்வால்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.

    கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்த செந்தாமரை கிருஷ்ணனுக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த தேன்பழ மரங்களில் காய்க்கும் பழங்களை அணில்கள், வவ்வால்கள் வந்து சாப்பிடுவது வழக்கம். சமீபத்தில் வீசிய காற்றில் தேன்பழ மரங்கள் சாய்ந்த நிலையில், வவ்வால்கள் பழம் கிடைக்காமல் சுற்றித் திரிந்தன.

    இதனைக் கண்ட செந்தாமரை கிருஷ்ணன் தனது கையில் பழத்தை வைத்துக்கொண்டு விசில் அடித்து அழைத்துள்ளார். அவர் அழைத்தவுடன் வவ்வால்கள் ஒவ்வொன்றாக வந்து அமர்ந்து கொண்டு அவரது கையில் இருந்த பழத்தை நிதானமாக சாப்பிட்டு விட்டுச் சென்றுள்ளன.

    இது வாடிக்கையான நிலையில் செந்தாமரை கிருஷ்ணனின் நண்பர் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி