முகப்பு /செய்தி /இந்தியா / அரசுத் துறைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்த புதுச்சேரி

அரசுத் துறைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்த புதுச்சேரி

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரியே முழு பொறுப்பு ஏற்பார். புதுச்சேரி அரசின் கணக்கு கருவூலத்துறை இதற்கான செலவினை ஏற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்  17 வகையான பிளாஸ்டிக் பொருட்களை அரசு துறை மற்றும் அரசு  நிறுவனங்களில் பயன்படுத்த புதுச்சேரி அரசு தடைவிதிதத்துள்ளது. மீறி அரசு துறைகளில் பயன்படுத்தினால் அதற்கான செலவிற்கு  சம்பந்தப்பட்ட அதிகாரியே பொறுப்பு  என நிதி துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக நிதி  துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மே மாதம் 17ஆம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அரசு துறைகளில் தடை விதிக்கப்பட்டது.

அதன்படி பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக்  தண்ணீர் பாக்கெட், சமையல் மேஜையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தர்மாகோல் கப்,  பலூன், பிளாஸ்டிக் கரண்டியுடன் கூடிய ஐஸ்கிரீம், தர்மாகோல், நூறு மைக்ரானுக்கு குறைவான பிளக்ஸ் விளம்பரங்கள், பிளாஸ்டிக் ஸ்பூன் உட்பட 17 பொருட்களுக்கு அரசுத்துறைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டார்கெட் 2030: டெல்லி விமான நிலையத்தில் ஏற்படப்போகும் முக்கிய மாற்றம்

தடையை மீறி பொருட்கள் வாங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரியே முழு பொறுப்பு ஏற்பார். புதுச்சேரி அரசின் கணக்கு கருவூலத்துறை இதற்கான செலவினை ஏற்காது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருவதாக நிதித்துறையின் துறை கீழ்நிலை செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் இன்று உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

First published:

Tags: Plastic Ban, Puducherry