காலி மதுபான பாட்டில்களில் கண்ணைக் கவரும் ஓவியங்களை வரைந்து அசத்தும் இளம்பெண்

நடைபாதைகளில் மது பாட்டில்களை வீசுவது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றைச் சேகரித்து அழகழகான ஓவியங்களை அதில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் புதுவையைச் சேர்ந்த இளம்பெண்.

நடைபாதைகளில் மது பாட்டில்களை வீசுவது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில், அவற்றைச் சேகரித்து அழகழகான ஓவியங்களை அதில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் புதுவையைச் சேர்ந்த இளம்பெண்.

  • Share this:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பயன்பாட்டுக்குப் பிறகு வீசியெறியப்படும் மது பாட்டில்கள் ஆங்காங்கே சாலையில் கிடப்பதுண்டு. அவற்றில் உடைந்து போன கண்ணாடி மதுபாட்டில்கள் பொதுமக்களுக்கு அதிக சிரமத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அவற்றையெல்லாம் சேகரித்து ஒவ்வொன்றிலும் தனித்துவமான ஓவியத்தை வரைந்து, அதை தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து வருகிறார் பட்டதாரியும் இல்லத்தரசியுமான திவ்யா.

இவர் சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்படும் சமூக நிகழ்வுகளை மையக் கருத்தாகக் கொண்டு அந்த பாட்டில்களில் ஓவியம் தீட்டி உபயோகமான பொருளாக அவற்றை மாற்றுகிறார். அந்த வகையில் பாலியல் வன்கொடுமை, மதுவால் ஏற்படும் கேடு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்.

Also read: திருப்பூரில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்தில் மறுநடவு செய்யப்பட்ட 90 வயதான அரசமரம் - பூ தூவி வழியனுப்பி வைத்த ஊர் மக்கள்பாட்டில்களில் அழகழகான ஓவியங்களை திவ்யா வரைந்து வைத்துள்ளார்.


இதுகுறித்து திவ்யா கூறுகையில், உடைந்த மது பாட்டிலால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு பாதிப்பு ஏற்படுவதை முயன்றவரை தடுக்கும் நோக்கில் சாலையில் செல்லும்போது அந்த  பாட்டில்களைச் சேகரித்து குப்பை தொட்டியில் பாதுகாப்பாக வைத்து வந்தேன். நாளடைவில் கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்ததால் அவற்றை உபயோகமான ஓவியங்களை வரைந்து வருகிறேன் என்றார்.

மேலும், பொது இடங்களில் பாட்டில்களை வீசாமல் குப்பைத் தொட்டியில் போடுமாறும், அவற்றை பயனுள்ள பொருளாகவும் மாற்றலாம் என்று அவர் தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: