ஜூனோசிஸ் தினம்: விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் குறித்து புதுச்சேரியில் பிரசுரங்கள் விநியோகம்

ஜூனோசிஸ் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் குறித்து பொது மக்களிடம் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஜூனோசிஸ் தினம்: விலங்குகளிடமிருந்து பரவும் நோய்கள் குறித்து புதுச்சேரியில் பிரசுரங்கள் விநியோகம்
புதுச்சேரியில் ஜூனோசிஸ் தினம் கடைபிடிப்பு.
  • Share this:
உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூலை ஆறாம் தேதியை  ஜூனோசிஸ் தினமாக கடைபிடித்து வருகிறது. ஜூனோசிஸ் என்பது விலங்கு அல்லது பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களாகும். அது மட்டுமல்லாமல் மனிதர்களிடமிருந்து பிராணிகளுக்கும் வரக்கூடிய நோய் ஆகும். இதிலிருந்து மனிதர்களையும் விலங்குகளையும் காப்பாற்றும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் பிராணிகள் நலம் மற்றும் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையின் சார்பில் ஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது. ரேபீஸ் என்ற நோய் வெறிநாய்க்கடி மூலம் மனிதர்களுக்குப் பரவும், பறவைக் காய்ச்சல் நோய் கோழிகள் மூலம் பரவும், ஒட்டுண்ணிகள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவும். இந்த நோய்களில் இருந்து மனிதர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என விழிப்புணர்வு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Also see:



அதில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளிடம் பழகும்போது முன்னெச்சரிக்கையைக் கையாளவேண்டும், செல்லப் பிராணிகளின் நகம் மற்றும் பற்கள் பட்டால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், செல்லப்பிராணிகள் உள்ள வீட்டில் உணவுப் பண்டங்களை மூடி வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி நகரப்பகுதியில் தெருக்களில் சுற்றும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிராணிகள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading