• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தமிழகம்- புதுச்சேரி ஆட்டோ இயக்க அனுமதி பெறவேண்டும்- உயர் நீதிமன்றம்

தமிழகம்- புதுச்சேரி ஆட்டோ இயக்க அனுமதி பெறவேண்டும்- உயர் நீதிமன்றம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடலூர்- புதுச்சேரி வழித்தடத்தில் இயக்கும் ஆட்டோக்கள் உரிய அனுமதியை பெற்றுள்ளதா என்பதை தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒன்றியத்தை சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தின் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள், தமிழக போக்குவரத்து துறையின் உரிமம் பெற்றிருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்களை அந்த வழித்தடத்தில் இயக்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் கடலூரில் இருந்து புதுச்சேரியின் கிருமம்பாக்கம் இடையில் உரிய அனுமதியின்றி 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், அந்த ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரியைச் சேர்ந்த கிருபாநந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  புதுச்சேரி தரப்பில்,  கடலூர்- புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரு இடத்தில் அனுமதி பெறுவது அவசியம்  என்றும்  கடலூரில் உள்ள போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டதால்,  மேற்கொண்டு அனுமதி பெற தேவையில்லை என்று வாதிடப்பட்டது.  இதேபோல், அரசின் கவனத்துக்கு எந்த விதிமீறல்களும் கொண்டுவரப்படவில்லை என்று புதுச்சேரி  போக்குவரத்து ஆணையர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், புதுச்சேரியில் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்றாலும், தமிழ்நாடு மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள போக்குவரத்துத் துறையினர், அந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வழங்கிய சான்றிதழைப் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?


அத்தகைய உரிமம் அல்லது அனுமதி இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆட்டோ அந்த வழித்தடத்தில் பயணிகள் போக்குவரத்து உட்பட எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் படிங்க: ஆற்றில் கொண்டு செல்லப்பட்ட இறுதி ஊர்வலம் : தொடரும் அவலம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: