Home /News /national /

அனாதையாக கிடந்த 500 ரூபாய்  கட்டு.. உரியவரிடம் ஒப்படைத்த  ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

அனாதையாக கிடந்த 500 ரூபாய்  கட்டு.. உரியவரிடம் ஒப்படைத்த  ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை

ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர்

Puducherry | புதுச்சேரியில் அனாதையாக கிடந்த 50,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அனாதையாக கிடந்த ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டு. 

புதுச்சேரி முருங்கப்பாக்கம் அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுனர் காளியப்பன் என்பவர் அவருடைய மருமகளை மருத்துவ பரிசோதனைக்காக புதுச்சேரி நகரப்பகுதி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள ஷப்னம் மருத்துவமனையில் இறக்கிவிட்டு வண்டியை திருப்பினார்.அப்போது எதிரில்  இரு சக்கர வாகனம்  நிறுத்துமிடத்தில்  500 ரூபாய்  கட்டு அனாதையாக கிடந்தது. இதனை  எடுத்த அவர் நேராக இருந்த  மருத்துவமனை அலுவலகம் சென்று இந்த பகுதியில் யாரேனும் பணம் தவற விட்டிருந்தால் தன்னுடைய போன் நம்பருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

Also Read: நாய் மீது துப்பாக்கிச் சூடு.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

அதே மருத்துவமனையில் பணிபுரியும் காசாளர்  ஞானவேல் என்பவர் மருத்துவமனை பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற பொழுது தவற விட்டிருக்கிறார். நீண்ட நேரமாகியும் காசாளர் மருத்துவமனைக்கு வரவில்லை என்று போன் செய்து கேட்டபோது பணத்தை தவற விட்டுவிட்டேன், மார்க்கெட் பகுதியில் தேடி வருகிறேன் வந்து விடுகிறேன் என்று பதிலளித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு  வாருங்கள்.. ஒரு ஆட்டோ ஓட்டுனர் பணம் கீழே  கிடந்ததாக கூறி  எடுத்து வைத்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டடு தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரை தொடர்புகொண்டு கொண்டு   மாலை 4 மணிக்கு  நேரில் சந்தித்து தொகை எவ்வளவு என்று விசாரித்து அவர் சொன்ன தொகை சரி என்பதை சரி பார்த்து போது 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதனையடுத்து பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. இதே போல்  நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை சிஐடியு சங்கம் சார்பில்  செயலாளர் சீனுவாசன்  பாராட்டி கவுரவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Auto, Auto Driver, Money, Pudhucherry

அடுத்த செய்தி