புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை.