வாக்காளர்களை கவர புது, புது ஐடியாக்களை கையாளும் வேட்பாளர்கள்

வாக்காளர்களை கவர புது, புது ஐடியாக்களை கையாளும் வேட்பாளர்கள்

ஏம்பலம் தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கந்தசாமி கோர்காடு கிராமத்தில் டிராக்டர் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

  • Share this:
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.6-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் 485 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து,  கடந்த 20-ம் புதுச்சேரியில் 8, காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒன்று என மொத்தமுள்ள 12 தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் 485 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் தட்டாஞ்சாவடி, ஏனாம் என 2 தொகுதிகளில் போட்டியிடும் ரங்கசாமியின் வேட்பு மனு உட்பட்ட காங்கிரஸ், என்ஆர் காங், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 382 வேட்பாளர்களின் 450 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில்  126 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 324 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக நெல்லித்தோப்பு, உழவர்கரை தொகுதியிலும்  தலா 16 பேர் போட்டியிடுகின்றனர். அடுத்த கட்டமாக உருளையன்பேட்டை, வில்லியனூர், ஏனாம் தலா 15 பேரும் போட்டியிடுகின்றனர் இந்த வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்  நமச்சிவாயம் திருக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். அங்கு நிலக்கடலை பறித்த விவசாயிகளுடன் மர்ந்து நிலக்கடலையை  ஆய்ந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள் என கேட்டு கொண்டார்.ஏம்பலம் தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கந்தசாமி கோர்காடு கிராமத்தில் டிராக்டர் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  மணவெளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அரசு கொறடா அனந்தராமன் திம்மநாயக்கன் பாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் இறங்கி களை எடுத்தார். விவசாயிகளிடம் "நானும் ஒரு விவசாயி தான்" என்று கூறி வயல் வெளியில் இறங்கி களை எடுத்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வில்லியனூர்  தொகுதில் திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் சிவாவிற்கு ஆதரவாக திமுக இளைஞரணியினர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் சிவா ஆகியோரின் முகமூடிகளுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்..
Published by:Vijay R
First published: