நாட்டை விட்டே காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது - புதுச்சேரியில் அமித்ஷா சூளுரை

நாட்டை விட்டே காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் காலம் வந்துவிட்டது - புதுச்சேரியில் அமித்ஷா சூளுரை

அமித் ஷா

50 லட்சம் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள திட்டத்தால், புதுச்சேரி மீனவர்கள் பெரிய அளவில் பயன்பெறுவர் என தெரிவித்தார்

 • Share this:
  வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி மலரும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

  இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்த அமித் ஷாவை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் நட்சத்திர ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, பாஜக சார்பில் காரைக்காலில் நடைபெற்ற பொதுக்குழுவில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திரண்டுள்ள மக்கள் கூட்டம் மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் சட்டம்ன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்பதே உண்மை எனவும் குறிப்பிட்டார்.

  தொடர்ந்து பேசிய அமித் ஷா, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்ததாக குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவரிடம் மட்டுமின்றி உடன் இருந்தவர்களிடம் நாராயணசாமி பொய் உரைத்ததால் தான், அவர்கள் கட்சியில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார். மேலும், உலகத்தில் பொய் சொல்வதற்கான விருது இருந்தால், அதை நாராயணசாமிக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

  மேலும் 50 லட்சம் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள திட்டத்தால், புதுச்சேரி மீனவர்கள் பெரிய அளவில் பயன்பெறுவர் என தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்தால், புதுச்சேரி இளைஞர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை மாற்றி காட்டுவோம் என குறிப்பிட்டார். மேலும், உலகின் உன்னத மொழியியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருவதாகவும், தமிழ் மொழியை கற்றுக் கொள்ள ஆசைப்படுவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: