கொரோனா பரவும் கூடாரமாக மாறிய சட்டமன்ற வளாகம்..

கொரோனா பரவும் கூடாரமாக மாறிய சட்டமன்ற வளாகம்..

கொரோனா தொற்று குறைந்து வரும் நேரத்தில் சட்டசபையில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கொரோனா அலை ஒன்றின் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருந்தது. முதல் அலையில் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலை கடுமையாக தாக்கியதில் பலரும் உயிர் இழந்ததால் மக்கள் உயிர் பயத்தால் சமூக இடைவெளி, தனி நபர் இடைவெளி, முக கவசம், கிருமிநாசினி என கட்டுபாட்டுக்குள் வந்தனர். ஆனால் கை மீறி போனது. வீட்டுக்கு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது அலை புதுச்சேரியை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் தடையின்றி பரவியது கொரோனா. பாதிப்பு எண்ணிக்கை 1,18,000 தாண்டியது. கொரோனாவிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1769. வாக்குப்பதிவிற்கு பிறகு மீண்டும்  90 நாட்களுக்கு ஊரடங்கு போடப்பட்டதாலும் தடுப்பூசி போடப்படுவதாலும் கொரோனா தொற்று கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 50% என பெருமை கொண்டாலும் ஊரடங்கு தளர்வு காரணமாக மக்களிடம் தொற்று பயமற்று போய் விட்டது. "இனி புதுச்சேரிக்கு கொரோனாவே இல்லை"-என்பது போல் சகஜமாக புழங்க துவங்கி விட்டனர். கடற்கரை சாலை, பூங்கா, கோயில்கள், விழாக்கள் என எங்கு பார்த்தாலும் கூட்டம். அதை விட மிக பெரிய நோய் பரவும் மையமாகி விட்டது சட்டமன்ற வளாகம். முதலமைச்சர், அமைச்சர்களை சந்திக்க ஆயிர கணக்கில் மக்கள் குவிகின்றனர். நோய் தொற்று காரணமாக சட்டமன்றத்திற்குள் நுழைய கடும் கட்டுபாடு என சபாநாயகர் செல்வம் கூறியது காற்றோடு போனது.

சமூக இடைவெளியின்றி சட்டமன்றத்தில் ஒரே நேரத்தில் மக்கள் குவிந்து நோய் பரப்பும் மையமாகி விட்டது. புதிய அரசு பொறுப்பேற்று அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், பல்வேறு கோரிக்கைகளுக்காக ஊழியர் சங்கங்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் முதல்வரை சந்திக்க சட்டசபைக்கு வரத்துவங்கியுள்ளனர்.

Also read: விவசாயிகளை தேடி சென்று கொரோனா தடுப்பூசி: அசத்தும் புதுச்சேரி அரசு!

சட்டசபை அமைந்துள்ள விக்டர் சிமோன்வீதி முழுக்க இருசக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. கண்ட இடங்களில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்து வரும் நேரத்தில் சட்டசபையில் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக இடைவெளி முழுக்க கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், சட்டசபை கொரோனா பரப்பும் மையமாக மாறிவிட்டது.

நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சுகாதார துறை அமைச்சரான முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க மக்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய முதலமைச்சர், முதலில் மக்கள் வருகையை கட்டுப்படுத்தினால் சட்டமன்றத்தில் கூடும் பெருமளவிலான கூட்டம் குறையும். இதே போல சபாநாயகர் செல்வம் எடுத்த நடவடிக்கையின் படி மக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம் தேவை. இல்லை என்றால் புதுச்சேரியில் மீண்டும்  நோய் அதிக அளவில் எட்டும் என்பதில் ஐயமில்லை.
Published by:Esakki Raja
First published: