புதுச்சேரி: 300 ஆக்சிமீட்டர் (Pulse-Oximeter) வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்: வீடு வீடாகச்சென்று தன்னார்வலர்கள் சோதனை..

தன்னார்வலர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புதுச்சேரியில்   வீடு வீடாக சென்று இந்த கருவியின் மூலம் மக்களை பரிசோதித்து பார்க்கும் சேவையை  துவங்கி உள்ளார்கள்.

புதுச்சேரி: 300 ஆக்சிமீட்டர் (Pulse-Oximeter) வழங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்: வீடு வீடாகச்சென்று தன்னார்வலர்கள் சோதனை..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
  • Share this:
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வண்ணம் இருக்கிறது.இன்று புதிதாக 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,566 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 298 ஆகவும் உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 11,107 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் டில்லி முதல்வர்  அரவிந்த் கேஜ்ரிவால் புதுச்சேரிக்கு  300 உயிர்காக்கும் பிராணவாயு அளவைக் கருவியான PULSE OXIMETER-ஐ வழங்கியுள்ளார். இதனை புதுச்சேரி மக்கள் பயன்படுத்துவதற்காக இலவசமாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அனுப்பியுள்ளார்.இதனை கட்சியின் தன்னார்வலர்களுக்குபுதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் ரவி சீனிவாசன் இன்று வழங்கினார்.

மேலும் படிக்க: கொரோனா தொற்றுக் காலத்தில் அவசியத் தேவையாக மாறிவரும் Finger Pulse Oximeter | சில விளக்கங்கள்..


இதனை பெற்ற  தன்னார்வலர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புதுச்சேரியில்   வீடு வீடாக சென்று இந்த கருவியின் மூலம் மக்களை பரிசோதித்து பார்க்கும் சேவையை  துவங்கி உள்ளார்கள்.

பல்ஸ் - ஆக்சிமீட்டர் சோதனை


இந்த கருவியில் அளவு 95-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில்லை. புதுச்சேரியில்  கோவிட்  மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில் ,படுக்கை வசதிகள்  குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த கருவியின் பயன் மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.தேவைப்படுபவர்கள் ஆம் ஆத்மி கட்சியின்  WHATSAPP எண்ணில்  பதிவு செய்தால் உடனடியாக ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலர்கள் அங்கு சென்று அவர்களுடைய பிராணவாயு அளவை கணித்து சொல்வார்கள். இந்த சேவை இன்று முதல் புதுச்சேரி முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading