எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - உறுதியளித்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - உறுதியளித்த புதுச்சேரி முதல்வர்
நாராயணசாமி
  • Share this:
புதுச்சேரி சட்டபேரவைக் கூட்டம்  இன்று மதியம் 3 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்த செயல் கண்டனத்குரியது. இந்த செயல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், கந்தசஷ்டி கவசம் குறித்த அவதூறாக பேசியவர்கள் புதுச்சேரிக்கு எப்படி வந்தார்கள்? ஏன் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, கந்தசஷ்டி கவசம் பற்றி யார் அவதூறாக பேசி இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்விவகாரம் தொடர்பான ஏற்கனவே தமிழக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இ-பாஸ் இல்லாமல் எப்படி புதுச்சேரி வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பதிலளித்தார்.

புதுச்சேரியில் வாட்ஸ் அப்பில் மிரட்டுவது அதிகரித்துள்ளது.. தேவையற்ற தவறான தகவல்களை சில சமுக விரோதிகள் பரப்புவது கூடிவிட்டது. இதன்மீது கடும் நடவடிக்கை இருக்க வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சைபர் கிரைம் துறை இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் முதல்வர் நாராயணசாமி உறுதியளித்தார்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading