• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலர்.. குவியும் பொதுமக்களின் பாராட்டு..

தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலர்.. குவியும் பொதுமக்களின் பாராட்டு..

மூதாட்டியை காப்பாற்றிய காவலர்

மூதாட்டியை காப்பாற்றிய காவலர்

விசாரணையில் அந்த மூதாட்டி புதுச்சேரி தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரி கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தார்.

புதுச்சேரி ஒதியஞ்சாலை  காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பாண்டியன் கடற்கரை சாலையில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற  வயதான மூதாட்டியை உடனடியாக வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.  மேலும் அவர் மயக்க நிலையில் இருந்ததால்  அந்த மூதாட்டியை கையில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்.

Also read... கோவை: கைதி தற்கொலை செய்து மரணமடைந்ததாக சிறைத்துறை தகவல்: அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் புகார்..



பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மூதாட்டி புதுச்சேரி தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றியதை அனைவரும் பாராட்டினர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: