Home /News /national /

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆட்டோ ஓட்டுநர் ராஜ சேகர்

ஆட்டோ ஓட்டுநர் ராஜ சேகர்

விழுப்புரம் மாவட்டம் காக்குப்பத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ சேகர் (38), இவர் கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரி அண்ணா சாலையில் நடந்து சென்ற சிறுமியை தான் உறவினர் என ஏமாற்றி கூறி ஆட்டோவில் கடத்தி விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்றார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :


புதுச்சேரியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் காக்குப்பத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜ சேகர் (38), இவர் கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரி அண்ணா சாலையில் நடந்து சென்ற சிறுமியை தான் உறவினர் என ஏமாற்றி கூறி ஆட்டோவில் கடத்தி விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்துள்ளார்.


அங்கு இரண்டு நாட்களாய் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மீண்டும் ஆட்டோவிலேயே புதுச்சேரிக்கு கொண்டு வந்து விட்டார். இது குறித்து வந்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் போக்சோ  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




இந்த வழக்கானது புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது  தீர்ப்பு கூறப்பட்டது.  அதில் குற்றவாளி  ராஜசேகருக்கு போக்சோ சட்டத்தின் கீழ்  10 ஆண்டுகள் கடுங்காவல்  சிறை தண்டனையும் 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.




மேலும் கடத்தலுக்கு 5 ஆண்டுகள், வீட்டில் அடைத்து வைத்தற்கு ஓராண்டு  என சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் பாலமுருகன்  ஆஜரானார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry, Sexual harasment

அடுத்த செய்தி