10,000 ரூபாய் மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தினர் சுகாதார துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், ஆகிய பிராந்தியங்களில் 72 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குறைந்த அளவே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை மாத சம்பளம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் புதுச்சேரி அரசையும் சுகாதார துறையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.