எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த மர்மநபர்கள்... போராட்டத்தில் இறங்கிய அதிமுக எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தவர்களை கைது செய்ய கோரி அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த மர்மநபர்கள்... போராட்டத்தில் இறங்கிய அதிமுக எம்.எல்.ஏக்கள்
எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி துண்டு
  • Share this:
புதுச்சேரி-விழுப்புரம் புறவழிச்சாலை வில்லியனூர் சந்திப்பில்  எம்ஜிஆருக்கு ஆள் உயர சிலை உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் இன்று மாலை  காவி துண்டு அணிவித்துள்ளனர். இதனை அவ்வழியே சென்ற அதிமுகவினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சி தலைவரின் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also read... நியூஸ்18 செய்தி எதிரொலி... ஆவின் நாணய சங்கத்தில் நடந்த கையாடல் விவகாரத்தில் 2 பேர் பணியிடை நீக்கம்


உடனே அங்கு வந்த  விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சிலை பீடத்தின் மீது ஏறி துண்டை அகற்றி விட்டு மாலையை அணிவித்து புறப்பட்டு சென்றனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading