புதுச்சேரி: மருத்துவக் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா..

புதுச்சேரி: மருத்துவக் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா..

புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

  • Share this:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.Also read: பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்

இந்நிலையில், புதுச்சேரி அரசும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு  கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Published by:Rizwan
First published: