புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு - கிரண் பேடி வரும் பாதையை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

 புதுச்சேரி எம்ஜிஆர் சிலை அவமதிப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து துணைநிலை ஆளுநர் வரும் பாதையை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு - கிரண் பேடி வரும் பாதையை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது
  • Share this:
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வில்லியனூர் சந்திப்பில்  அமைந்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மர்மநபர் ஒருவர் காவி துண்டு அணிவித்த சம்பவத்தில் நேற்று அப்பகுதிக்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவி துண்டை அகற்றி மாலை அணிவித்து, போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ஆனால், இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாததால் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் வாயிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா, பாஸ்கர் ஆகியோர், துணை நிலை ஆளுநர் உரையாற்ற வர இருந்த பாதையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர்.

துணைநிலை ஆளுநர் வருகைக்கு முன்பு தர்ணா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், உடனடியாக காவல் துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் மீண்டும் சட்டப் பேரவைக்கு திரும்பினார்.


Also read... கொரோனா நோயாளிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? இளம்பெண் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

இதனிடையே பாஜக உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபைக்கு பேனர் ஏந்தி வந்தனர். அவர்கள் கொரோனா பாதித்த மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்பதை பேனரில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading