Cyclone Nivar | நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தானே உணவு தயாரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ 

Cyclone Nivar | முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தானே உணவு தயாரிக்கும் பணியில் இறங்கினார்.

Cyclone Nivar | முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தானே உணவு தயாரிக்கும் பணியில் இறங்கினார்.

  • Share this:
    நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியபோது புதுச்சேரியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. உப்பளம் உழவர் சந்தை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரே இருளில் மூழ்கியது.

    முழங்கால் அளவிற்கு மழை நீர் நிற்பதால் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பாதி அளவு மூழ்கி பழுதாகி நிற்கின்றன.

    புதுச்சேரி துறைமுகத்தில் சூறாவளிக் காற்றின் தீவிரத்தை உணர்த்தும் உச்சபட்ச அளவான 11-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க...லஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பு..





    இந்நிலையில் முத்தியால்பேட்டையில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள்ளே இருந்தனர். அத்துடன் வீடுகளில் தண்ணீர் புகுந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்று காலை முதல் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவை முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தானே சமைத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published: