• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Puducherry : புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே உடன்பாடு : பட்டியலுடன் வரும் பாஜக மேலிட பொறுப்பாளர்!

Puducherry : புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே உடன்பாடு : பட்டியலுடன் வரும் பாஜக மேலிட பொறுப்பாளர்!

புதுச்சேரி சட்டமன்றம்

புதுச்சேரி சட்டமன்றம்

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சரவை பங்கீட்டில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

  • Share this:
தமிழகத்தைப் பாலவே, புதுச்சேரி சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும, பாஜக 6 இடங்களையும் கைப்பற்றின. அங்கே ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 16 இடங்களை இந்த கூட்டணி பெற்றிருந்தது. இதனால் வெற்றி பெற்ற அந்த கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அமைச்சரவை பதவி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளும் பேசிக் கொண்டதையடுத்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ரங்கசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று, நலமுடன் வீடு திரும்பி அவர் தனிமையில் இருந்தார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் பணிகள் தள்ளிப்போயின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமண எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரசை விட பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்தது. இதனால், புதுச்சேரி அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மே 26ஆம் தேதி புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பதவிகள் குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது துணை முதலமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள் மற்றும் சபாநாயகர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வந்தது.

புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி என்பது இதுவரை இல்லாத ஒன்று, முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் கொண்ட சட்டமன்றத்தில், பாஜகவுக்கு சமமாகன இடம் கொடுக் ரங்கசாமி தயக்கம் காட்டி வந்தார். ஆனால், இந்த கோரிக்கையில் பாஜக விடாப்பிடியாக இருந்தது. இதனால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது.

இதற்கிடையில், மேலிட அழைப்பின் பேரில் பாஜக தலைவர்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லிக்குச் சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து விவரித்தனர்.

இந்தநிலையில், ரங்கசாமியுடன் அமைச்சரவை பதவி இடங்கள் பகிர்ந்து கொள்வது குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவிக்கான இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே சமயம் துணை முதலமைச்சர் பதவியை கேட்டபதை பாஜக வைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்து.

Must Read : கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும் - சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் அறிக்கை!

இதனைத் தொடர்ந்து, பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி மற்றும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் இன்று புதுச்சேரி வரவுள்ளனர். அவர்கள், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர்களுக்கான பட்டியலை அளிக்க உள்ளனர். வரும் 7ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலும், 14ஆம் தேதி பாஜகவின் 2 அமைச்சர்கள்,என்.ஆர்.காங்கிரசின் 3 அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: