Home /News /national /

புதுச்சேரியில் ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பணிக்கு தேர்வு...!

புதுச்சேரியில் ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பணிக்கு தேர்வு...!

போலீஸ் பணிக்கு தேர்வு

போலீஸ் பணிக்கு தேர்வு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பணிக்கு தேர்வு துவங்கியது. முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக விண்ணபித்தவர்களில் 14,787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. இன்று முதல் 20 நாட்களுக்கு தேர்வு நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கே வந்த தேர்வர்கள் மைதானத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன.



குறிப்பாக கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கேட்கப்படுகிறது. விண்ணப்பித்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வேறு நாளில் தேர்வு நடத்த தேதி கொடுக்கப்படுகிறது. உள்ளே அனுமதிக்கப்படுபவர்களுக்கு உடல் எடை, உயரம், மார்பு அளவு போன்றவை எடுக்கப்படுகிறது.

அதன் பிறகு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் போன்றவை நடத்தப்படுகிறது. எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் நேர்மையாக நடைபெறும் வகையில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பட்டை அணிந்து ஓட்டும், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதிகள் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.



தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோர் போன் எடுத்து வர அனுமதி கிடையாது.
தேர்வில் ஈடுபடும் போலீசாரும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. மீறி வைத்திருந்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also read... புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை

தேர்வில் ஈடுபடும் போலீசாரின் உறவினர்கள் தேர்வில் பங்கேற்றால், அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு நடத்தும் அதிகாரிகளை சுழற்சி அடிப்படையில் பணிகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு வருவோர் கொரோனா இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும். இவர்கள் எளிதாக சான்றிதழ் பெறும் வகையில் மைதானத்திலேயே சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தால் வேறு தேதியில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

உடல் தகுதி தேர்வை நேர்மையாக நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆனந்தமோகன்
தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Police, Pondicherry

அடுத்த செய்தி