கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களிடம் பாடங்களில் சந்தேகங்களை கேட்பதற்காக அக்டோபர் 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த ஜனவரி 4ம் தேதி முதல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டன.
கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் அனைத்து பள்ளிகளும், முழு நேரமாக செயல்பட தொடங்கின. 1, 3,5,7ம் வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2,4,6,8ம் வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வகுப்பறைக்கு செல்லும் முன் மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது.
மேலும் படிக்க..
குறைந்த தொகுதிகளை ஒதுக்கும் திமுக.. அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..?

மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தை, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தை போன்று 9, 10, 11ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதித்தேர்வுகளை ரத்து செய்யலாமா என்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களின் நலன் கருதியே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தமிழிசை கூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.