மதுபான தொழிற்சாலைகளால் ₹500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக

புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலைகளில் நடைபெற்ற மோசடியை சிபிஐ விசாரிக்க வேண்டுமென அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.

மதுபான தொழிற்சாலைகளால் ₹500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக
  • Share this:
புதுச்சேரியில் 7 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் ஒவ்வொரு மதுபாட்டிலும் எப்போது தயாரிக்கப்பட்டது, எந்த மாநிலத்தில் விற்கப்பட இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் அடங்கிய அரசின் ஹாலோகிராம் ஒட்டப்படுவது வழக்கம்.

இதில் மங்கலம் கிராமத்தில் தனியார் மதுபான தொழிற்சாலையில் போலி ஹாலோகிராம் தயாரித்து மதுபானங்களை விற்பதாக புகார் வந்தது. இதனடிப்படையில் கலால் துறை அதிகாரிகள் கடந்த 13 ம் தேதி தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்ததில் போலி ஹாலோகிராம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள் இதுகுறித்து மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்  மேலும் ஒரு தொழிற்சாலையில் தவறு நடப்பதாக கலால் துறைக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் காட்டேரிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலையை கலால் துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு தவறு நடந்ததை உறுதி செய்த பின்னர் ஆலைக்கு  சீல் வைத்தனர்.


இந்த இரு ஆலைகளில் நடைபெற்ற மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் இதற்கு உடந்தையாக கலால் துறையின் வருவாய் அதிகாரி அருண்பிரசாத் இருந்தது தெரிய வர அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே மங்கலம் ஆலையின் மேலாளர் பொன்னாராவ், ஓட்டுநர் குமார் ஆகியோர் கைதாகியுள்ள நிலையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் மனு அளித்துள்ளார். அதில், புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளில் தயாரிக்கப்படும் ஹாலோகிராம் முத்திரை போலியாக தயாரித்த இரண்டு மதுபான ஆலைகள் மூடப்பட்டு இதுகுறித்து விசாரணை சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் ஆளும் அரசு இதற்கு துணையாக இருப்பதால் சிபிசிஐடி விசாரணை சரியாக இருக்காது. அதனால் இதுகுறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்து மனு அளித்தார்.

மேலும் இதுகுறித்து விசாரணை சரியாக செய்து இதன் மூலம் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading