தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளை கூறலாமா? கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மதிப்பிற்குரிய கிரண்பேடி அவர்கள், சமூக வலைதளத்தில் ‘‘ஏனோதானோ’’ என்று கருத்து கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பா.வளர்மதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News18 Tamil
Updated: July 1, 2019, 10:11 PM IST
தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளை கூறலாமா? கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்!
கிரண் பேடி
News18 Tamil
Updated: July 1, 2019, 10:11 PM IST
தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளை கூறலாமா? என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பா.வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்னை மாநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புதுசேரி துணை நிலை ஆளுநர் மேதகு கிரண் பேடி அவர்கள், தான் வகிக்கும் மதிப்பிற்குரிய பதவிக்கு சற்றும் பொருந்தம் இல்லாத வகையில், சமூகவலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் தரும் வகையில் அமைந்திருந்தது. பெண்மைக்கே உரிய உயர்ந்த தயையும், தாயுள்ளமும், சிறிதும் இன்றி, மதிப்பிற்குரிய கிரண்பேடி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்னிந்தியா முழுவதும் கடுமையான வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுகின்றன. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பெய்திருக்க வேண்டிய பருவ மழை பொய்த்துவிட்டதாலும், கடந்த சில மாதங்களாக வீசிய கடும் வெப்பக் காற்று காரணமாகவும், நடப்பாண்டில் போதுமான மழை பெய்யாத காரணத்தாலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலுமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்திய நாட்டில் உள்ள மாவட்டங்களில் சரிபாதிக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதையும், கடந்த 65 ஆண்டுகளில் இப்படி குறைவான மழை அளவை நாடு சந்தித்ததில்லை என்ற புள்ளிவிவரத்தையும் மாண்புமிகு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர ஷெகாவத் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

2017-ம் ஆண்டு பெய்ததைவிட, 62 விழுக்காடு குறைவாகவே 2018-ம் ஆண்டு சென்னையில் மழை அளவு இருந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையிலும்கூட, தமிழ்நாடு அரசு சென்னை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்த அளவு என்பது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தண்ணீரைவிட நாள் ஒன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் அதிகமாகும்.

சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை மட்டும் சார்ந்திராமல், வீராணம் திட்டம் மூலமும், ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலமும் தண்ணீர் பெற்று, சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் வழங்க இயன்ற அனைத்தையும் இரவு, பகல் பாராது ஜெயலலிதா அமைத்துத் தந்த அரசு செய்து வருகிறது.

இந்த உண்மைகளையெல்லாம் உணராமலும், ஒதுக்கித் தள்ளிவிட்டும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மதிப்பிற்குரிய கிரண்பேடி அவர்கள், சமூக வலைதளத்தில் ‘‘ஏனோதானோ’’ என்று கருத்து கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புகழ் வாய்ந்த காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர், தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டுமென்ற இங்கீதம் கூடத் தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் சேரவேண்டிய உரிய பங்கினைப் பெற்றுத் தர பாடுபட வேண்டிய இந்த நேரத்தில், தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல, அன்புரையாகக் கூறிக்கொள்கிறேன்’’ என்று பா.வளர்மதி கூறியுள்ளார்.
First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...