Home » News » National » PUDUCHERRY ADMK MLAS WALKOUT FROM PUDUCHERRY ASSEMBLY RIZ ELA

புதுச்சேரி முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
அதிமுக எம்.எல்.ஏக்கள்
  • Share this:
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி துவங்கியது. இதில் நேற்று முன்தினமும், நேற்றும் சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏக்கள் வரவில்லை. கலைஞர் கருணாநிதியை விமர்சித்த அதிமுகவையும் அதனைக் கண்டிக்காத காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் 3 தினங்களுக்கு முன் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை நிகழ்வு துவங்கியவுடன் முதல்வர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில், ஒரு அச்சுப் பிழை ஏற்பட்டுள்ளது. அதை திருத்தம் செய்யக் கூறியுள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு காலை ரொட்டி பால் திட்டத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் தொடர்கிறது. புதிதாக மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கு கலைஞர் கருணாநிதி பெயரும் சூட்டப்பட்டுள்ளது. எந்தத் தலைவரும் விடுபடவில்லை என்றார்.

Also read: பெரம்பலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை


மேலும், ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கக் கோரிய அதிமுக உறுப்பினர் திமுக தலைவரை அவதூறாக விமர்சித்தது தவறு என்று கூறிய அவர், சட்டசபையில் பேசும்போது அரசியல் தலைவர்களை அதிமுகவினர் தவறாக விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவைக்கு திமுகவினர் வர வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று திமுகவின் 3 எம்எல்ஏக்களும் அவைக்குள் வந்தனர்.

அப்போது அதிமுக அன்பழகன், எந்தத் தலைவரையும் அவதூறாகப் பேசவில்லை; ஜெயலலிதாவிற்கு ஏன் சிலை வைக்கவில்லை என்றே கேட்டோம். ஆனால் தவறாகப் பேசியதாக முதல்வர் அதிமுகவின் மீது பொய் புகார் கூறுகிறார் என்றார். முதல்வர் கூறியதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading