மின்துறை ஊழியர்களைக் கண்டித்து புதுச்சேரி சட்டமன்றம் முன் அதிமுக எம்.எல்.ஏ தர்ணா

புதுச்சேரி மின்சார ஊழியர்களின் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி சட்டமன்றம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மின்துறை ஊழியர்களைக் கண்டித்து புதுச்சேரி சட்டமன்றம் முன் அதிமுக எம்.எல்.ஏ தர்ணா
அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி
  • Share this:
மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறை தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து புதுச்சேரி மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று அலைபேசி எண்களை அனைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முத்தியால் பேட்டை பகுதியில் நேற்றிரவு 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.

இதனால் புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை கண்டித்தும்,  உடனடியாக மின் ஊழியர்கள் பொதுமக்களின் நலன் கருதி செயல்பட வலியுறுத்தியும் முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சட்டமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading