அத்தியாவசிய பொருட்களை இலவசமாக டோர் டெலிவரி செய்யும் எம்எல்ஏ..!

தொகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை சட்டமன்ற உறுப்பினருக்கு அனுப்புகின்றனர்.அந்த பட்டியலை பெறும் தன்னார்வலர்கள் பொருளை வாங்கி பயனாளிகளிடம் அளிக்கின்றனர்.

அத்தியாவசிய பொருட்களை இலவசமாக டோர் டெலிவரி செய்யும் எம்எல்ஏ..!
அதிமுக எம் எல் ஏ வையாபுரி மணிகண்டன்
  • Share this:
புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக டோர் டெலிவரி செய்து வருகிறார். 

கொரோனா என்னும் கொள்ளைத் தொற்றுநோய் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால்  ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது மத்திய அரசு.

பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அரசின் கட்டுப்பாடுகளை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த அவசரகால நிலையை கண்டு முத்தியால்பேட்டை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவை விரட்ட நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த அவசர காலத்தில் மக்களின் நலன் கருதி சில சேவைகளை அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இதன்படி முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். தங்களின் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள், அரிசி, மருந்துகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை தங்கள் வீடுகளுக்கே நேரில் கொண்டுவந்து வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அறிவுறுத்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று இல்லாதவாறு பரிசோதிக்கப்பட்ட நபர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொகுதி மக்கள் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி தங்களின் தேவைகளுக்காக இவர்களை தொடர்புகொள்ளலாம்.உங்கள் தேவைகளை உடனுக்குடன் பெறலாம் எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தொகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் பட்டியலை சட்டமன்ற உறுப்பினருக்கு அனுப்புகின்றனர். அந்த பட்டியலை பெறும் தன்னார்வலர்கள் பொருளை வாங்கி பயனாளிகளிடம் அளிக்கின்றனர்.

Also see... 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்