பஞ்சாப்பில் தங்கி இருந்த வீட்டிற்கு இதுவரை வாடகை தரவில்லை - கிரண்பேடி மீது  அமைச்சர் குற்றச்சாட்டு

புதுச்சேரி சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர்.

பஞ்சாப்பில் தங்கி இருந்த வீட்டிற்கு இதுவரை வாடகை தரவில்லை - கிரண்பேடி மீது  அமைச்சர் குற்றச்சாட்டு
ஆளுநர் கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவித்த நிலையில், கிரண் பேடி அதனை புறக்கணித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் கிரண் பேடியை விமர்சித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர். அரசு கொறடா அனந்தராமன் பேசுகையில், துணைநிலை ஆளுநர்  பதவிக்கே தகுதியில்லாதவர் கிரண்பேடி. அவரை பிரதமரும், ஜனாதிபதியும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார். சுகாதார ஊழியர்களை அவமானப்படுத்திய கிரண்பேடியை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் பேசினார்.

சரியாக செயல்படாத டாக்டர்களை தூக்கிலிட வேண்டும் என்று கிரண்பேடி கூறியது கண்டிக்கத்தக்கது. ஜூலை மாதம் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வராது என கிரண்பேடி கூறியுள்ளது அவரது அடிமைத்தனத்தை காட்டுகிறது. பட்ஜெட் கோப்பிற்கு கிரண்பேடி கையொப்பமிடவில்லை என்றால் ராஜ் நிவாஸ் மற்றும் டில்லிக்கு சென்று தீக்குளிக்கவும் தயார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தி பேரவையில் ஆவேசமாக கூறினார்.


அடுத்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் கிரண்பேடிக்கு வேலைக்காரர்களா? பஞ்சாப்பில் உள்ள வீட்டிற்கு இதுவரை கிரண்பேடி வாடகை தரவில்லை, அவர் மீது 420 வழக்கு உள்ளது என குற்றசாட்டை வைத்தார்.

அடுத்து  பேசிய முதல்வர் நாராயணசாமி, பலமுறை  அதிகாரிகளை பொது இடங்களில் கிரண்பேடி திட்டிய போது அவ்வாறு செய்ய கூடாது என கூறியுள்ளேன். தற்போது 2 தினங்களுக்கு முன் மருத்துவர்களை திட்டியது புதுச்சேரி அரசுக்கு அவமானம். கொரோனா காலத்தில் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ஆளுநர், தனது தகுதியை மீறி மருத்துவர்களை திட்டி கொரோனா தடுப்பு பணிகளுக்கு எதிராக செயல்படுகிறார்.


படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
இந்த அரசு மருத்துவர்களுடன் இருக்கிறது. எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இறுதியாக சபாநாயகர் சிவக்கொழுந்து, துணைநிலை ஆளுநர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அந்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என கூறி சபை நடவடிக்கைகளை நாளை காலை வரை ஒத்தி வைத்தார்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading