புதுச்சேரியில் நாளை பட்ஜெட்: ஆடம்பர அறிவிப்புகள் தேவையில்லை - அ.தி.மு.க வலியுறுத்தல்

புதுச்சேரியில் நாளை பட்ஜெட் வரவுள்ளநிலையில், ஆடம்பர அறிவிப்பு தேவையில்லை என்று அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளை பட்ஜெட்: ஆடம்பர அறிவிப்புகள் தேவையில்லை - அ.தி.மு.க வலியுறுத்தல்
அ.தி.மு.க அன்பழகன்
  • Share this:
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

அதன்பிறகு இடைத்தேர்தல் காரணமாகவும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாகவும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக மத்திய அரசு அனுமதியின் அடிப்படையில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாளை காலை தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்காக காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து பகல் நண்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.


இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன்,’கடந்த ஆண்டு 8,450 கோடி ரூபாய்க்கு  பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் அதிக நிதி இல்லாத காரணத்தினால் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனை அரசு கருத்தில் கொண்டும் இவ்வாண்டு கொரோனாவால் மாநில வருமானம் 40 சதவீதமாக குறைந்து உள்ளதாலும் அரசின் வருமானத்திற்கு ஏற்ப பட்ஜெட்டை போட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதை விடுத்து கூடுதலான தொகைக்கு பட்ஜெட்டை போட்டு மக்கள் தலையில் கூடுதலாக கடனை செலுத்த வேண்டாம் என வலியுறுத்திய அன்பழகன், வரும் பொது சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்திஆடம்பர திட்டங்களை அறிவிக்க கூடாது என்றும் அன்பழகன் கூறினார்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading