மாநிலத்திற்கு மாநிலம் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் - புதுச்சேரி அதிமுக தலைவர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபாய் நிதி உதவி கேட்கும் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் ஆட்சி செய்யும் புதுச்சேரி மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 வழங்க ஏன் முன்வரவில்லை என அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்பழகன்
- News18 Tamil
- Last Updated: July 29, 2020, 10:16 AM IST
மாநிலத்திற்கு மாநிலம் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேஷம் போடுகிறார். எதிர் கட்சியாக உள்ள தமிழகத்தில் திமுக ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக உள்ள புதுச்சேரியில் திமுகவிற்கு வேறு நிலைப்பாடு என ஸ்டலின் மீது அன்பழகன் குற்றசாட்டு வைத்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் புதுச்சேரி அரசை வலியுறுத்தினார். புதுச்சேரி மக்கள் பயத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 5-ல் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக துணைநிலை ஆளுநர் கூறுவதால், அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
மேலும் படிக்க...கொரோனா பெயரில் புதிய மோசடி - 3 நாளில் ₹ 1 கோடி வசூல் செய்த கும்பல்
மேலும் 1000 பேர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க வசதியில்லை. தற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.
மேலும், ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் புதுச்சேரி அரசை வலியுறுத்தினார்.