Home /News /national /

5 மடங்கு உயர்த்திட்டீங்க அய்யா.. முதல்வரிடம் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கோரிக்கை

5 மடங்கு உயர்த்திட்டீங்க அய்யா.. முதல்வரிடம் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கோரிக்கை

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

புதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெற இருக்கும் புதுப்பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி சென்றுள்ளார்.

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவருடைய இல்லத்தில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவருகிறார். கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம், சிறப்புத் தோற்றம் என பல பரிமாணங்களில் நடித்துவருகிறார்.
    விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது வரவேற்பை பெற்ற நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புதுச்சேரியில் 10 நாட்கள் நடைபெற இருக்கும் புதுப்பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி சென்றுள்ளார். அப்போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவருடைய இல்லத்தில் சென்று மரியாதை நிமித்தமாக விஜய் சேதுபதி சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, “ கடந்த காலங்களில் ரூ. 5 ஆயிரம் வசூலித்த நிலைய புதுச்சேரியில் தற்போது ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரியுடன் ரூ.28 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதனை குறைக்க வலியுறுத்தி முதல்வர் ரங்கசாமியிடம், நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்தார் அதனை பரிசீலனை செய்வதாகவும் முதல்வர் உறுதி அளித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actor Vijay Sethupathy, News On Instagram, Pudhucherry

    அடுத்த செய்தி