Home /News /national /

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக் கொண்ட இளைஞர்

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக் கொண்ட இளைஞர்

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக் கொண்ட இளைஞர்

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக் கொண்ட இளைஞர்

புதுச்சேரியில் தடுப்பூசி (Vaccine) செலுத்திக் கொள்ள பயந்து இளைஞர் ஒருவர் மரத்தின் மீது ஏறி போக்கு காட்டிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் கோனேரிக்குப்பம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது 40 வயது இளைஞர் ஒருவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என கூறி அங்கு உள்ள மரத்தின் உச்சியில் ஏறிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் 80% பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 100 சதவீத தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்கள் ஊசி போடுவதற்கு சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கோனேரிக்குப்பம் கிராமத்தில் சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தினார்கள். அப்போது வீட்டில் மரத்தின்மேல் கத்தியுடன் 40 வயது மிக்க ஆண் அமர்ந்து இருந்தார். அவர் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவர அவரை போட்டுக் கொண்டு கீழே இறங்கி வருமாறு சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் அந்த நம்பர், “தடுப்பூசி போட மாட்டேன்.. உங்ககிட்ட சிக்க மாட்டேன்” என கூறி மறுத்து மேலேயே தங்கிவிட்டார். சுகாதார ஊழியர்கள் கெஞ்சிக் கேட்டும் அவர் வரவில்லை. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Read More : கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

தடுப்பூசி செலுத்திக் கொள்ள கீழே வாருங்கள் என அந்த இளைஞரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கெஞ்சினர். எனினும் அவர் கடைசிவரை வராததால் அதிகாரிகள் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.



Must Read : புத்தாண்டு கொண்டாட்டம் : தடை, கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை காவல்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Covid-19 vaccine, Omicron, Puducherry

அடுத்த செய்தி