கைதிகளின் உடல்நலம், மன நலம் மேம்பட விளையாட்டு பயிற்சி துவக்கம்..
கைதிகளின் உடல்நலம், மன நலம் மேம்பட விளையாட்டு பயிற்சி துவக்கம்..
புதுச்சேரி மத்திய சிறையில் விளையாட்டு பயிற்சி
Puducherry Prison: கைதிகளின் உடல் நலம், மனநலம் மேம்பட புதுச்சேரி மத்திய சிறையில் விளையாட்டு பயிற்சித்திட்டத்தை சிறைத்துறையுடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கைதிகளின் உடல்நலம், மன நலம் மேம்பட புதுச்சேரி மத்திய சிறையில் விளையாட்டு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உடல் நலம், மனநலம் மேம்பட புதுச்சேரி மத்திய சிறையில் விளையாட்டு பயிற்சித்திட்டத்தை சிறைத்துறையுடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. பயிற்சியாளர் மூலம் பயிற்சி தரப்படவுள்ளது.
இந்தியன்ஆயில் நிறுவனமானது, "பரிவர்த்தன் - சிறைச்சாலையிலிருந்து பெருமை மிக்க வாழ்வுக்கு" என்கிற முன்முயற்சியை 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு பல விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கும் முறையை நீட்டித்துள்ளது.
அதன்படி மூன்றாவது கட்டமாக இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா புதுடெல்லியில் இருந்து இணைய வழியில் புதுச்சேரி மத்திய சிறையில் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார். அப்போது விளையாட்டு பயிற்சி முகாம்களை ஒரே தருணத்தில் புதுச்சேரி மத்திய சிறையில், புதுச்சேரி சிறைத் துறை தலைவர் ரவிதீப் சிங், இந்தியன்ஆயில் தென் மண்டல செயல் இயக்குநர் (மண்டல சேவை) சைலேந்திரா மற்றும் இந்தியன்ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
இதுபற்றி இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் வைத்யா இணையவழியில் கூறுகையில், "கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சியும், விளையாட்டு சாதனங்களையும் வழங்குவோம். சிறையில் இருந்ததால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையை போக்கி சமூகத்தில் சகஜமாக வாழ இவ்விளையாட்டுகள் துணை புரியும். பரிவர்த்தன் என்ற திட்டத்தின் மூலம் ஆயில் நிறுவனத்தில் பணிபுரியும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளியிலிருந்து சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் சிறைகைதிகளுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி பயன் பெற வழிவகுக்கும்.
இத்திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் 15ல் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக காந்தியடிகள் பிறந்தநாளான 2021 அக்டோபர் 2ல் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நிலைகளில் 1100 கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி தந்தோம். தற்போது மூன்றாவது கட்டமாக கைதிகளின் மனநலம், உடல் நலம் மேம்பட தற்போது கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைபந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம், ஆகிய பயிற்சிகளை தரவுள்ளோம்.
இப்பயிற்சிகளை புதுச்சேரி மத்திய சிறை, ராஞ்சி மத்திய சிறை, ஜாம்ஷெட்பூர் மத்திய சிறை, தன்பந்த் மாவட்ட சிறை, ராஜமுந்திரி மத்திய சிறை, பெங்களூரு சிறை, குருஷேத்ரா மாவட்ட சிறை, ஜெய்ப்பூர் மத்திய சிறை, ராய்ப்பூர் மத்திய சிறை, ஹெல்த்வானி கிளைசிறை, தேராதூன் மாவட்ட சிறை, ஷில்லாங் மாவட்ட சிறை, ஜம்மு மாவட்ட சிறை, சண்டிகர் மத்திய சிறை, போர்ட்ப்ளேர் ப்ரோத்ரபூர் சிறை ஆகியவற்றில் தற்போது தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் கைதிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி, யோகா பயிற்சி, நடன பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.